காணாமல் போனவர்கள் தொடர்பாக இதுவரையில் 11,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும், அவை தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்படும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திபொன்றில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகளில் போதிய முன்னேற்றம் இல்லை என முறைப்பாடுகள் எழுந்துள்ளன.
எனினும், இதற்கு முன்னைய அரசாங்கங்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் பொறுப்பல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 375 அதிகாரிகளுக்குப் பயிற்சிகளை வழங்குவதற்காகத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு, கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் 5,000 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை இந்த ஆண்டிற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரு பகுதிகளிலும் இடம்பெற்ற காணாமல் போன சம்பவங்கள் குறித்து நாங்கள் விசாரணைகளை முன்னெடுப்போம்" என அமைச்சர் உறுதியளித்தார்.
Latest News
இங்கிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானம்
Local
19 September 2026
வாகனப் பதிவு மற்றும் போக்குவரத்து அசௌகரியங்கள் குறித்து முறைப்பாடு செய்ய புதிய 'வட்ஸ்அப்' இலக்கம் அறிமுகம்!
Local
19 September 2026
குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்து 'பாசிவ் கூலிங்' முறைகளை ஊக்குவிக்க இலங்கை அழைப்பு!
Local
19 September 2026
தம்புள்ளை அதிபரின் உயிரைப் பறித்த விபத்து: பேருந்து சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை அம்பலம்!
Local
19 September 2026
அனோஜனுக்காக முன் நிற்க அரசாங்கம் தயங்காது: நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா!
Local
19 September 2026
மகா ஓயாவில் நீராடச் சென்ற நால்வரில் இருவரின் உடலங்கள் மீட்பு
Local
19 September 2026
BRICS விவகாரத்தில் இலங்கையின் நகர்வு மந்தமா? பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன?
Local
19 September 2026
இஸ்லாமியப் புரட்சியும் அமெரிக்கப் பகையும் -'சூரியனின் விழுதுகளில் சிறப்பு அலசல்!
Local
19 September 2026
கம்பஹா – படல்கம, மகா ஓயாவில் நீராடச் சென்ற நால்வர் மாயம்
Local
19 September 2026
“ஊர் வாயை அடைக்க முடியாது” - முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்து அட்லீ சொன்ன பதில்
Local
19 September 2026