General02 February 2026

சட்டவிரோத தொழிலில் சிறுவர்கள் - அதிர வைக்கும் தகவல்

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்; சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவதும், அதை மறைப்பதற்காக பாடசாலை சீருடை அணிவதும் கண்டறியப்பட்டுள்ளதாக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. 
 
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு, வழங்கிய செவ்வியில் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ். எம். பியதிஸ்ஸ இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். 
 
கடுமையான பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கும் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் வருமானம் ஈட்டும் செயல்களில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
குறித்த சிறுவர்கள் பாடசாலை கல்வியை நிறைவு செய்து வீடு திரும்பும் தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக, பாடசாலை சீருடையை அணிந்து பல்வேறு வருமான மீட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த விடயம் தொடர்பில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைந்து, சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ். எம். பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes