General03 May 2026

அஸ்வெசும குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டில் உள்ள அஸ்வெசும பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன இந்த முன்னோடித் திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகத் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல தெரிவித்தார்.

உலக வங்கித் திட்டத்தின் கீழ், 10 ஆயிரத்து 975 பயனாளி குடும்பங்கள் வலுவூட்டல் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அவர்களில் சுமார் 40 சதவீதமானோர் இதுவரை இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக, தம்மிக முத்துகல கூறியுள்ளது.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியும் 13 மாவட்டங்களிலுள்ள 10 ஆயிரத்து 300 குடும்பங்களை வலுவூட்டுவதற்கான முன்னோடித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருவதாக பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes