General04 May 2026

சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23ஆம் திகதி நடைபெற்றது.
 
இதில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆயுதங்கள் ஏந்திய காவல் குழுவினர் மூலம் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டு ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

சென்னை பெருநகர காவல் ஆணையாளரது உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் மேற்பார்வையில், இணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், துணை ஆணையாளர்கள் தலைமையில் மேற்படி 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 4 அடுக்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பலத்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனை தொடர்ந்து சுமார் 22,000 காவல்துறையினர் வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் சென்னை பெருநகர் காவல் எல்லை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes