தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கத் தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், திராவிடக் கட்சிகள் ஒன்றிணைய உள்ளதாக வெளியாகும் தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் தற்போது காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. திமுக உடனான நீண்டகாலக் கூட்டணியை முறித்துக் கொண்டு, சில நிபந்தனைகளின் அடிப்படையில் தவெக-விற்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முன்வந்துள்ளது.
எனினும், ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெற இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு விஜய்க்குத் தேவையாக உள்ளது. இதற்காக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது.
இதனிடையே, யாரும் எதிர்பாராத திருப்பமாக, பல தசாப்தங்களாக அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாகச் செயல்பட்டு வரும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்கும் நோக்கில், திராவிட அரசியலின் இரு பெரும் சக்திகளும் ஒன்றிணையப் புதிய வியூகம் வகுத்து வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டணிக்கு அந்தந்த அணிகளில் உள்ள பிற கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், அவர்களால் எளிதாகப் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் எனத் தெரிகிறது.
தவெக-விற்கு ஆதரவளிப்பது குறித்துத் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில், அது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளின் புதிய வியூகம் மற்றும் அரசியல் மாற்றங்களே இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கைகோர்க்கும் சூழல் உருவாகியுள்ளதா என்பது மக்களிடையே பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. கொள்கை ரீதியாக மாறுபட்ட இந்த இரு கட்சிகளின் முடிவு தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Latest News
மீண்டும் அதிரடியாக உயரும் தங்க விலை
Local
07 May 2026
வருமானத்தை மறைத்ததாக விஜய் மீது முறைப்பாடு: மனுவை விசாரணைக்கு எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Local
07 May 2026
தமிழக அரசியல் பரபரப்பு : தொங்கு சட்டமன்றத்தில் புதிய திருப்பம் - திமுக, அதிமுக இரகசியப் பேச்சுவார்த்தை?
Local
07 May 2026
விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு மீளப்பெறப்பட்டது!
Local
07 May 2026
நீலகாமம் சம்பவத்துக்கு நாமல் கடும் கண்டனம்: உடனடி விசாரணைக்கு வலியுறுத்து
Local
07 May 2026
சித்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை 256 என்புக்கூட்டுத் தொகுதிகள்!
Local
07 May 2026
தவெகவுக்கு ஆதரவா?: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் விளக்கம்
Local
07 May 2026
8 மாத கர்ப்பிணியாகக் களம் கண்டு வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்!
Local
07 May 2026
கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் 6 புதிய திட்டங்கள்!
Local
07 May 2026
“அதிக பணிச்சுமை: மன அழுத்தம்” - சீருடையை கழற்றி வைத்துவிட்டு சென்ற கான்ஸ்டபிள்!
Local
07 May 2026