நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச விசா (Free Visa) வழங்கும் நடைமுறைக்கான விதிமுறைகளுக்கு நாடாளுமன்றம் இன்று (07) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய திருத்தங்கள் குறித்து பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் விளக்கமளித்தார்.
புதிய விதிமுறைகளின்படி, தெரிவு செய்யப்பட்ட 40 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் 30 நாட்கள் தங்கியிருப்பதற்கான இலவச விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கு முன்னர் சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, ரஷ்யா மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தின் கீழ் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஸ்திரியா, பெலாரஸ், பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, பஹ்ரைன், ஈரான், இஸ்ரேல், கஸகஸ்தான், குவைத், நேபாளம், ஓமான், பாகிஸ்தான், கட்டார், சவுதி அரேபியா, தென் கொரியா, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, ரஷ்யா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இந்த நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விசா கட்டணம் அறவிடப்படமாட்டாது.
இதேவேளை கட்டணம் அறவிடப்படாவிட்டாலும், மின்னணு பயண அங்கீகாரம் (ETA) பெறுவது உட்பட ஏனைய அனைத்து குடிவரவு நடைமுறைகளையும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இந்த இலவச விசா திட்டத்தினால் அரசாங்கத்திற்கு சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இதன் மூலம் மேலதிகமாக 2,47,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக 317 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்படுவதுடன், இறுதியில் நாட்டிற்கு 242 மில்லியன் அமெரிக்க டொலர் தேறிய இலாபம் கிடைக்கும் என அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டினார்.

Latest News
நாடு தழுவிய சோதனை: லஞ்ச் சீட் மற்றும் 'சிலி-சிலி' பொலித்தீன் விதிமீறல்கள் கண்டுப்பிடிப்பு
Local
21 September 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எட்டு வாகனங்கள் மோதி விபத்து: 06 பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
Local
21 September 2026
வலுவடையும் குறைந்த அழுத்தப் பிரதேசம் – நாட்டில் தொடரும் கனமழை!
Local
21 September 2026
அத்துருகிரிய மற்றும் மாலவியாகந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: துப்பாக்கிதாரி உட்பட 4 சந்தேகநபர்கள் கைது!
Local
21 September 2026
இந்திய நிதியுதவியுடன் மொரகஹகந்த – வெல்லேவல பாலம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!
Local
21 September 2026
பல மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை!
Local
21 September 2026
நச்சு வைக்கப்பட்டதா? ங்கோரோங்கோரோ 10 சிங்கங்கள் உயிரிழப்பு
Local
21 September 2026
நாட்டின் தொழிலாளர் படை 8 மில்லியனைக் கடந்துள்ளது - நுவரெலியாவில் பெண்களின் பங்களிப்பு அதிகம்!
Local
21 September 2026
"நாட்டைவிட்டே தப்பியோட முயன்றவர்களுக்கு வினையான போலி ஆவணங்கள்": காவல்துறையிடம் சிக்கிய அதிநவீன மோசடி வலையமைப்பு!
Local
21 September 2026
தமிழகம் முழுவதும் கோலாகலமாக நிறைவடைந்த விநாயகர் சதுர்த்தி: பிரமாண்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு!
Local
21 September 2026