வவுனியா, இரட்டைப்பெரியகுளம் குளத்துக்கு அருகில் இரண்டு மாணவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட 7 மாணவர்கள் இரட்டைப்பெரியகுளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் “வவுனியா சிங்கித்தி பாதாளய” (Vavuniya Sigithi Pathalaya) என்ற தலைப்பில் இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளி காட்சிகள் பரவியதைத் தொடர்ந்தே காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த 15 வயதுடைய இரண்டு மாணவர்கள் தற்போது வவுனியா பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் நேற்று (3) வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை கெபிதிகொல்லேவ சான்றளிக்கப்பட்ட சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரட்டைப்பெரியகுளம் காவல்துறையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News
41 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி!
Local
04 June 2026
ட்ரம்பின் ‘போர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானம்’ நாடாளுமன்றில் நிறைவேற்றம்!
Local
04 June 2026
விசேட கணக்கில் முடங்கிக் கிடக்கும் Rebuilding Sri Lanka திட்டத்தின் நிதி!
Local
04 June 2026
மனைவியை கொலை செய்து காணாமல்போனதாக நாடகமாடிய கணவர் கைது
Local
04 June 2026
பொன் சிவகுமாரன் நினைவேந்தல் ஏற்பாடு: பிரதேச சபை தவிசாளரிடம் காவல்துறை விசாரணை
Local
04 June 2026
ஈரானின் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தது அமெரிக்கா!
Local
04 June 2026
ரங்க நிஷாந்தவின் மரணத்துக்கு இதுவே காரணம்: நால்வர் அடங்கிய நிபுணர் குழு நீதிமன்றில் அறிக்கை
Local
04 June 2026
வவுனியாவில் தாக்குதல்: 7 மாணவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு!
Local
04 June 2026
மேற்கிந்திய தீவுகளுக்கு 304 ஓட்டங்கள் வெற்றி இலக்கு: பெதும், குசல் அபார அரைச்சதம்!
Local
04 June 2026
ஜூலைக்குள் இலங்கையின் இறக்குமதி செலவு கணிசமாகக் குறையும் என எதிர்பார்ப்பு
Local
04 June 2026