அரசின் வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 20% ஆக உயர்த்துவதற்கான நடுத்தர மற்றும் நீண்ட கால இலக்கை எட்டும் நோக்கில் பொருத்தமான யோசனைகள், கொள்கை பரிந்துரைகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வருமான முகாமைத்துவ குழுவினால் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அறிவித்தலில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்த குழுவுக்கு, நாட்டின் அறிஞர்கள், தொழில்முறை நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் இலங்கைப் பிரஜைகள் எவரும் தங்களது பங்களிப்புகளை வழங்க முடியும்.
குறிப்பாக, முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துதல், வரி அடிப்படையை விரிவுபடுத்துதல், வருவாய் ஈட்டும் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கல், தானாக முன்வந்து வரி செலுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் தரவு பகுப்பாய்வு அடிப்படையிலான வருவாய் அமைப்புகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல துறைகளின் கீழ் இந்த யோசனைகள் முன்வைக்கப்படலாம்.
இலங்கையின் பொது நிதிக் கொள்கைகள் குறித்து விசேட நிபுணத்துவம் பெற்ற எவராலும் சமர்ப்பிக்கப்படக்கூடிய இந்த யோசனைகள், அதன் சுருக்கம், செயல்படுத்தும் வழிமுறைகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் தாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக PDF வடிவத்தில் தயாரிக்கப்பட வேண்டும்.
இந்த யோசனைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதியாக 2026 ஜூன் 16 ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வருமான முகாமைத்துவக் குழு தெரிவித்துள்ளது.

Latest News
இஸ்ரேலில் சிற்றூந்து மூலம் சென்று துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, ஐந்து பேர் காயம்!
Local
08 June 2026
பெரும்போக நெற்செய்கைக்கு ட்ரோன் தொழில்நுட்பம்: உள்நாட்டு மென்பொருளுடன் புதிய அறிமுகம்!
Local
08 June 2026
வாகனம் மோதியதில் இரு பெண்கள் பலி: தப்பியோடிய போதை சாரதி கைது!
Local
08 June 2026
காசாவுக்கான எல்லைக் கடவைகள் காலவரையறையின்றி மூடல்!
Local
08 June 2026
அநுர, மைத்ரி ஆட்சிக்கால சட்டவாக்க ஒப்பீட்டு அறிக்கை தவறானது: ஐக்கிய தேசியக் கட்சி சவால்!
Local
08 June 2026
அடுத்தடுத்து மீட்கப்படும் சிறுவர்களினது எனக் கருதப்படும் என்புக்கூடுகள்!
Local
08 June 2026
ஈரான் தாக்குதலுக்குப் பின் ட்ரம்ப் அதிரடி கருத்து!
Local
08 June 2026
தாக்குதல்கள் தொடர்ந்தால் 'பரந்த' அளவிலான பதிலடி தரப்படும் என ஈரான் எச்சரிக்கை
Local
08 June 2026
இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகளை ஏவியது ஈரான்!
Local
08 June 2026
3 மாதங்கள் விரதமிருந்து கதிர்காமத்துக்கு வருகை தந்த ஜப்பானிய பக்தர்கள்!
Local
08 June 2026