மறைந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராகவும், கிராமிய சினிமாவின் முன்னோடியாகவும் போற்றப்பட்ட பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக காலமான நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் கலைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாரதிராஜாவின் கலைப் பங்களிப்புகளையும், தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய மகத்தான சேவையையும் கௌரவிக்கும் வகையில், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது X தளப் பதிவில் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளதாவது,
"தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன்.
கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள்.
தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் மகத்தான பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாரதிராஜாவின் இறுதி நிகழ்வுகளில் அரசு சார்பில் உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதுடன், அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.
தமிழ் சினிமாவின் முகவரியை உலக அரங்கில் தனித்துவமாகப் பதித்த பாரதிராஜாவின் மறைவு, திரையுலகிற்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

Latest News
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு
Local
10 June 2026
20 வயது இளம் பெண்ணை தேடுவதற்கு பொதுமக்களிடம் உதவி கோரிய காவல்துறை
Local
10 June 2026
இந்திய வரலாற்றில் நீண்டகாலம் பிரதமர் பதவி வகிக்கும் நரேந்திர மோடிக்கு அநுர குமார திசாநாயக்க வாழ்த்து
Local
10 June 2026
இலங்கை உட்பட 10 நாடுகளிலிருந்து மாத்திரம் வீட்டுப் பணியாளர்களைப் பெற்றுக் கொள்ள குவைத் அனுமதி
Local
10 June 2026
நாசாவின் ‘Artemis III’ நிலவுப் பயண விபரம் வெளியீடு: தொழில்நுட்ப தாமதங்களால் திட்டத்தில் மாற்றம்
Local
10 June 2026
"சபையை விட்டு வெளியேற்றுவேன்!" - நாடாளுமன்றில் சுஜீவவுக்கு சபாநாயகர் விடுத்த அதிரடி எச்சரிக்கை
Local
10 June 2026
கடந்த இரு நாட்களுக்குப் பின் தங்க விலையில் அதிரடி மாற்றம்!
Local
10 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று 335.39 ரூபாயாகப் பதிவு!
Local
10 June 2026
11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை
Local
10 June 2026
தேர்தலை ஒத்திவைத்தவர்களின் சிஸ்டத்தை மக்கள் மாற்றிவிட்டார்கள்! ரவிக்கு பிரதமர் ஹரிணி அதிரடிப் பதில்
Local
10 June 2026