General10 June 2026

இந்திய வரலாற்றில் நீண்டகாலம் பிரதமர் பதவி வகிக்கும் நரேந்திர மோடிக்கு அநுர குமார திசாநாயக்க வாழ்த்து

இந்திய வரலாற்றில் மிக நீண்டகாலம் பிரதமராக பதவி வகிக்கும் நரேந்திர மோடிக்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார் .

அப்பதிவில், இலங்கையானது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான பங்களிப்பிற்கு உயர் மதிப்பளிப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes