General12 June 2026

நாவலபிட்டி பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்து விபத்து - நால்வர் மருத்துவமனையில் அனுமதி

நாவலபிட்டி பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, வீடு ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளனர்.

இன்று (12) அதிகாலை 1 மணியளவில் நாவலபிட்டி, இம்புல்பிட்டிய மேல் பகுதி என்ற இடத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் நாவலபிட்டி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டி காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக வீட்டின் அருகில் இருந்த பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

இதன் போது மரத்தினடியில் சிக்கியிருந்த காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes