General13 June 2026

சுரேஷ் சலேயின் கைதால் புலம்பெயர் தமிழர்கள் மகிழ்ச்சியடையப்போவதில்லை

"அரச புலனாய்வு ப் பிரிவுப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டதன் மூலம் புலம்பெயர் தமிழர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியடையப் போவதில்லை என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றின் போது இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் ,

"இன்று மக்களுக்கு முறையான உணவோ, குடிக்கத் தண்ணீரோ இல்லாத அளவிற்கான பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெட்ரோல் விலை 434 ரூபாவாக உயர்ந்துள்ளது.ஈரான் போர் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதால் விலை மேலும் 600 ரூபா வரை அதிகரிக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் கூறக்கூடும். அதற்கும் கைதட்டி ஆதரவளிக்க 159 பேர் தயாராக இருக்கிறார்கள்."

எவ்வாறாயினும், நாட்டின் இந்த இக்கட்டான சூழ்நிலை தற்காலிகமானது எனக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, 2029ஆம் ஆண்டு வரை மக்கள் இந்தத் துயரத்தை அனுபவிக்க வேண்டியிருக்காது என்றும், அதற்கு முன்னதாகவே நாடு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என்றும் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes