General15 June 2026

டெங்கு நோயாளர் முகாமைத்துவம் - சுகாதார அமைச்சினால் புதிய மருத்துவ வழிகாட்டுதல்கள் வெளியீடு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக, டெங்கு நோயாளர் முகாமைத்துவம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் அனைத்து மருத்துவ நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகளை எவ்வித தாமதமுமின்றி, விரைவாக மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் நோயாளர்களிடமிருந்து இரத்த மாதிரிகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அனைத்து உத்தியோகபூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒவ்வொரு நோயாளரும் தகுதிவாய்ந்த ஒரு மருத்துவ அதிகாரியின் நேரடி மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மருத்துவர்களினால் கோரப்படும் பட்சத்தில், நோயாளர்கள் தங்களது இரத்த மாதிரிகளைத் தாமதமின்றி வழங்க முன்வர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes