General15 June 2026

அமெரிக்கா - ஈரான் உடன்படிக்கைக்கு சஜித் வரவேற்பு

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் உத்தியோகபூர்வ உடன்படிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வரவேற்றுள்ளார்.

பேச்சுவார்த்தை என்பது மனிதகுலத்தின் மிகப்பெரிய பலம் என்பதை இந்த உடன்படிக்கை மீண்டும் நினைவூட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ ‘X’ தளத்தில் விடுத்துள்ள பதிவில்,

"பிளவுகளினால் ஏற்படும் இழப்புகளையும், நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தையும் இலங்கை நன்கு அறியும். அமைதி என்பது வெறும் யுத்தம் இல்லாத நிலை மாத்திரமல்ல, அது நம்பிக்கை, கண்ணியம், வாய்ப்புகள் மற்றும் நமது பிள்ளைகள் ஒரு சிறந்த எதிர்காலத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையின் பிரசன்னமாகும். உலக மக்கள் இதற்கு எவ்வகையிலும் குறைந்தவர்களுக்கு உரியவர்கள் அல்லர். அமைதி நிலவட்டும்."

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு இணக்கப்பாடுகளை உள்ளடக்கிய உடன்படிக்கையொன்றை வொஷிங்டன் மற்றும் தெஹ்ரான் எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் இந்த வரவேற்பை பதிவு செய்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes