General15 June 2026

ஜூன் 19 இன் பின் அதிவேக நெடுஞ்சாலைகளில் விசேட சோதனை - பின்னிருக்கை ஆசனப் பட்டி கட்டாயம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப் பட்டி அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் இருதரப்பினருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை எச்சரித்துள்ளது.

வாகனங்களின் பின்னிருக்கைகளுக்கான ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதியுடன் நிறைவடைவதாக சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

ஜூன் 19ஆம் திகதிக்கு பின்னரான காலப்பகுதியில் இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்தும் பணிகள் மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes