General15 June 2026

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதாக அந்நாட்டுப் பிரதமர் கீர் ஸ்டார்மர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதமர் கீர் ஸ்டார்மர், இந்த முடிவு இலகுவாக எடுக்கப்பட்ட ஒன்றல்ல என்றும், சமூக ஊடகங்களால் இளைஞர்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைத் தான் மறுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும் இந்த முழுமையான தடை விதிப்பானது "சரியானதொரு தேர்வு" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes