General15 June 2026

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்பாடு

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை, பத்தனை சந்திக்கு அருகில் உள்ள வீதியில் யூக்கலிப்டஸ் மரங்கள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், அந்த வீதியூடான போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் நிலவும் குறித்த பகுதியை ஆய்வு செய்த பின்னர், பிரதான வீதிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த போக்குவரத்து மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் பலத்த காற்று மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, இந்த பகுதியில் உள்ள மரங்களின் வேர்கள் வெளியில் தெரிவதாகவும், இதனால் மரங்கள் வீதிக்கு மேலே சரிந்து விழுந்து விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அபாயகரமான நிலைமை குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வீதியூடாகப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மற்றும் பயணிகள் தங்களின் பயணங்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Related recommendation
Hiru TV News | Programmes