International15 June 2026

மேலும் அதிகரித்த தங்க விலை!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ப் பதற்றம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (15) குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,358.2 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 71.07 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையிலும் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அமெரிக்க டொலரின் வலுவூட்டல், உலக பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் தொடரும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றங்களும் இந்த விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நாடுவதும் தங்க விலை அதிகரிப்புக்கு காரணமாக இருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes