யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து பச்சிளம் குழந்தை மற்றும் இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 10 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் இன்று (15) முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 25ஆவது நாள் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, புதிதாக மேலும் 5 மனித என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், ஏற்கனவே வெளிப்பட்டிருந்த என்புக்கூடுகளில் சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தையின் என்புக்கூடுகள் உள்ளடங்கலாக 10 பேரினது என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் மீட்கப்பட்ட மனித என்புக்கூடுகளில் பெரும்பாலானவை உடைந்த நிலையிலும், சீரற்ற முறையிலுமே காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரையான அகழ்வுப் பணிகளின் போது மொத்தமாக 360 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 351 என்புக்கூடுகள் புதைகுழியிலிருந்து முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
தம்புள்ளையில் பதற்றம்: இலங்கை வீரருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே வாக்குவாதம்!
Local
15 June 2026
மட்டக்களப்பில் ஐந்து படுகொலைச் சம்பவங்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு: சி.ஐ.டி விபரம் சமர்ப்பிப்பு
Local
15 June 2026
செம்மணியில் பச்சிளம் குழந்தை, சிறார்கள் உட்பட மேலும் 10 பேரினது என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
Local
15 June 2026
தமிழக முதலமைச்சர் விஜய்யை குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகை சிம்ரன்!
Local
15 June 2026
மேலும் அதிகரித்த தங்க விலை!
Local
15 June 2026
வெறும் ரூ.50,000-க்கு குழந்தையை விற்ற தாய் கைது : 6 பேருக்கு எதிராக நடவடிக்கை!
Local
15 June 2026
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் : 100 நாட்களுக்குப் பின் அமைதி ஒப்பந்தம்!
Local
15 June 2026
நாளை இரவு முதல் 19 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் முற்றாகத் தடை!
Local
15 June 2026
விமல், கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்டோருக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை
Local
15 June 2026
சுரேஷ் சலேவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை; விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
15 June 2026