International17 June 2026

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஹிஸ்புல்லாவை கையாளும் விதம் தொடர்பில் தாம் திருப்தியடையவில்லை என, ட்ரம்ப் கூறுகிறார்.

லெபனான் தொடர்பான விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஹிஸ்புல்லாவை கையாளும் விதம் தொடர்பில் தாம் திருப்தியடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் எந்தவொரு புதிய தாக்குதலும் அல்லது லெபனான் பிரதேசங்களில் தொடரும் ஆக்கிரமிப்பும் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள இடைக்கால உடன்பாட்டை மீறும் செயலாகக் கருதப்படும் என, ஈரான் எச்சரித்துள்ளது.

இதேவேளை, ஈரானுடன் நடைபெறவுள்ள 60 நாட்கள் பேச்சுவார்த்தைக் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி, ஆய்வாளர்கள் மீண்டும் ஈரானுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்தக் காலப்பகுதியில் உலகின் முக்கிய கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையில் எந்தவித கட்டண வசூல்களும் இடம்பெறாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான், உடன்பாடு எட்டப்பட்டிருந்தாலும், தெற்கு லெபனானில் நிலைகொண்டுள்ள இஸ்ரேல் படைகள் அங்கிருந்து விலகப்போவதில்லை என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes