General17 June 2026

கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரும் கோட்டாபயவின் மனு: சட்டமா அதிபருக்கு இன்னும் அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுத் தொடர்பில், எதிர்மனுதாரர்களிடமிருந்து தமக்கு இன்னும் அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை எனச் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி இதனை நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes