General17 June 2026

ஹலம்பகே மற்றும் சூர்யவன்ஷிக்கு 50% அபராதம் விதிக்க போட்டி நடுவர் பரிந்துரை

தம்புள்ளையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்தியா 'A' மற்றும் இலங்கை 'A' அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு அபராதம் விதிக்குமாறு போட்டி நடுவர் (Match Referee) பரிந்துரைத்துள்ளார்.

இதன்படி, ஹலம்பகே மற்றும் வைபவ் சூர்யவன்ஷிக்கு 50% அபராதமும் திலக் வர்மாவிற்கு 30% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன் நிரோஷன் டிக்வெல்லவிற்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

'A' அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகளின்படி, போட்டி நடுவர் பரிந்துரைக்கும் இவ்வாறான ஒழுக்காற்று தடைகளை அமுல்படுத்தும் அதிகாரம் அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (பிசிசிஐ மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்) உரியதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes