உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முழுமையான விசாரணைத் தரவுகளை தற்போதைய இலங்கை அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து உத்தியோகபூர்வமாகக் கோரியுள்ளதா என அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஏப்ரல் 21 அன்று தாக்குதல்கள் நடத்தப்பட்ட குறுகிய காலப்பகுதிக்குள், அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் உதவியைக் கோரியிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி நினைவூட்டியுள்ளது.
இலங்கை புலனாய்வு அமைப்புகளுக்குச் சில தொழில்நுட்ப நிபுணத்துவம் பற்றாக்குறையாக இருந்தமையினாலேயே இந்த உதவி கோரப்பட்டதாகவும், அமெரிக்க அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு உறுதி அளிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் எப்.பி.ஐ (FBI) முகவர்கள், இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), இராணுவப் புலனாய்வுத் துறை மற்றும் அரச புலனாய்வுச் சேவை (SIS) ஆகியவற்றுடன் இணைந்து கூட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த விசாரணைகளின் முடிவுகளை எப்.பி.ஐ பின்னர் இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததுடன், உள்ளூர் அதிகாரிகளாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கட்சி குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த விசாரணைகளின் அடிப்படையில் 2020 நவம்பர் 12 அன்று எப்.பி.ஐ விசேட முகவரால் அமெரிக்க நீதிமன்றத்தில் விரிவான வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2020 டிசம்பரில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், இலங்கையில் ஏற்கனவே காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் சிலருக்கு எதிராக குற்றவியல் வழக்கும் தொடரப்பட்டது.

Latest News
கதிர்காம புனித பூமியை பிளாஸ்டிக் அற்ற வலயமாக்க 5 ஆண்டுத் திட்டம் ஆரம்பம்
Local
18 July 2026
உணவு தவிர்ப்பு போராட்டம் : சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில்
Local
18 July 2026
இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் - சீமான் சூசக அறிவிப்பு
Local
18 July 2026
எச்சரிக்கை நிலையை எட்டும் வெப்பநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!
Local
18 July 2026
பெருந்தோட்ட குடும்பங்கள் வெளியேற்றம்: சட்டப் போராட்டத்தில் களமிறங்கும் செந்தில் தொண்டமான்
Local
18 July 2026
விடுதியில் மாணவர்களின் அவலம் - முதல்வர் விஜய்யின் ஆய்வில் வெடித்த மாணவர்களின் முறைப்பாடுகள்
Local
18 July 2026
நடிகை ஜாக்குலினின் ஏஐ அவதாரம்!
Local
18 July 2026
கால்பந்து செம்;பியன்ஷிப் வெற்றியாளர்களுக்கு அமெரிக்க மோதிரங்கள்
Local
18 July 2026
உலக எரிசக்தி சந்தை : எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம்
Local
18 July 2026
சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் இலங்கைக்குள் போதைப்பொருள்! சுங்கத்தின் அதிர்ச்சி எச்சரிக்கை
Local
18 July 2026