2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, 225,748 மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 11, 795 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A தர சித்தி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
7,419 மாணவர்கள் எந்தவொரு பாடத்திலும் சித்தியடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானப் பாடத்தில் இந்தமுறை 70.1 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ள நிலையில், கணிதப் பாடத்தில் 72.03 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மாகாண அடிப்படையில் தென் மாகாணம் 75.56 சதவீதத்துடன் அதிகூடிய உயர்தரத் தகுதிப் பெறுபேற்றைப் பதிவு செய்துள்ளதுடன், வடமத்திய மாகாணம் 68.39 சதவீதத்துடன் குறைந்தளவான உயர்தரத் தகுதிப் பெறுபேற்றைப் பதிவு செய்துள்ளது.
இதனிடையே, 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் கோரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பரீட்சை ஒக்டோபர் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

Latest News
வாகனங்களுக்கு ஆசனப்பட்டி பொருத்த மேலும் மூன்று மாத காலம் அவகாசம்
Local
20 June 2026
தென் ஆபிரிக்காவுக்கான HIV ஒழிப்பு நிதியுதவியை நிறுத்துகிறது அமெரிக்கா
Local
20 June 2026
சுரேஷ் சலே வாய் மூலமாக உணவு உட்கொள்வதை மட்டுமே தவிர்த்துள்ளார் - நளிந்த ஜயதிஸ்ஸ
Local
20 June 2026
ஆசிரியர் சேவைக்கான முதலாவது வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சை செப்டம்பரில்: கல்வி அமைச்சு
Local
20 June 2026
எரிபொருள் QR முறையை நீக்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை; உலக சந்தையில் மீண்டும் விலை உயர்வு!
Local
20 June 2026
ஈரான் பயணத்தில் பாகிஸ்தான் அமைச்சர்! அராக்சியுடன் முக்கிய சந்திப்பு
Local
20 June 2026
நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!
Local
20 June 2026
2 கோடியை தாண்டியது த.வெ.க.வின் உறுப்பினர் எண்ணிக்கை: தென்னிந்தியாவில் புதிய சாதனை!
Local
20 June 2026
கடுவெல - வெலிவிட்ட பாலத்திற்கு அருகில் உள்ள களனி ஆற்றில் ஆண் ஒருவரின் உடலம் மீட்பு
Local
20 June 2026
அவுஸ்திரேலியாவை எட்டிய H5 வைரஸ்: உலகளாவிய பரவல் முழுமை பெற்றது!
Local
20 June 2026