வாகனச் சாரதிப் பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுவிப்பாளர்கள், கட்டாயமாக முறையான பயிற்சி உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும் என இலங்கை காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறான அங்கீகாரம் இன்றி பயிற்சிகளை நடத்தும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனதீர ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்:
பல சாரதிப் பயிற்சி நிலையங்கள் முறையான பயிற்சி உரிமங்களைக் கொண்டிருந்தாலும், நடைமுறையில் போதிய சான்றிதழ் இல்லாத நபர்களே பெரும்பாலும் பயிற்சிகளை நடத்துவதாகச் சுட்டிக்காட்டினார்.
"யாரேனும் சாரதிப் பயிற்சிகளை வழங்கினால், அவர் கட்டாயமாக சாரதிப் பயிற்சி உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.
முறையற்ற பயிற்சிகளைப் பெற்று உரிமம் பெறும் இளைஞர்களே அதிகளவில் வீதி விபத்துகளில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இளைஞர்கள் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் குறைபாடுகளைக் கொண்டிருப்பதும், வீதி அடையாளங்கள் மற்றும் விதிகளைப் பின்பற்றத் தவறுவதும் விபத்துகளுக்குக் காரணமாக அமைவதாக அவர் விளக்கினார்.
மேலும், சாரதிப் பயிற்சி உரிமம் வழங்கும் முறைமை தொடர்பில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், சான்றளிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் மட்டுமே மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க அனுமதிக்கப்படுவதை உறுதி செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி காவல்துறை மா அதிபர் சேனாதீர மேலும் தெரிவித்தார்.
Latest News
தெல்தெனிய பெண் மரணம் - காதலனுக்கு உதவிய மற்றுமொரு நபர் கைது
Local
24 June 2026
தென்னங்கன்றுகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்
Local
24 June 2026
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி: "நான் சாகவில்லை என்றால் வருவேன்" தனது நண்பருக்கு அனுப்பிய கடைசி செய்தி
Local
24 June 2026
கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் தொழில்சார் நடவடிக்கை
Local
24 June 2026
நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் திருட்டு: மகன் மீதும் முறைப்பாடு பதிவு!
Local
24 June 2026
சுப்பர் ஸ்டார் - உலக நாயகன் கூட்டணி: ரஜினியின் அடுத்த அதிரடி 'தர்மன்' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Local
24 June 2026
"அங்கு பெரிய முதலைகள் இருக்கின்றன..!" - நாடாளுமன்றத்தில் நாவல பாலம் குறித்து ஹர்ஷ டி சில்வா காரசாரம்!
Local
24 June 2026
மனிதர்கள் செல்ல முடியாத இடங்களிலும் கண்காணிப்பு: டெங்குவை கட்டுப்படுத்த ட்ரோன் தொழில்நுட்பம்
Local
24 June 2026
கொழும்பில் புதிய 'மெட்ரோ பேருந்து' சேவை; யாருக்காக தெரியுமா? - பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன விளக்கம்!
Local
24 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
24 June 2026