Sports25 June 2026

ஹெய்ட்டியை வீழ்த்தி மொரோக்கோ வெற்றி

கால்பந்து கிண்ணத் தொடரின் 'C' குழுவுக்கான லீக் போட்டியில் ஹெய்ட்டி அணியை 4 - 2 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணி தோற்கடித்துள்ளது.

அட்லாண்டா மைதானத்தில் 68,239 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்து 2 - 2 என சமநிலையில் முடிவடைந்தது.

ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் மொரோக்கோ அணியின் யாசின் பூனு (Y. Bounou) சொந்த கோல் (Own Goal) அடித்ததால் ஹெய்ட்டி அணிக்கு முதல் கோல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து 39ஆவது நிமிடத்தில் மொரோக்கோ அணியின் ஏ. ஹக்கிமி (A. Hakimi) ஒரு கோல் அடித்து ஆட்டத்தைச் சமப்படுத்தினார்.

பின்னர் 43ஆவது நிமிடத்தில் ஜே. டுவெர்னின் (J. Duverne) உதவியுடன் ஹெய்ட்டி அணியின் டபிள்யூ. இசிடோர் (W. Isidor) ஒரு கோல் அடிக்க, அடுத்த இரு நிமிடங்களில் (45'+1 வது நிமிடத்தில்) ஏ. ஹக்கிமியின் உதவியுடன் மொரோக்கோவின் ஐ. சைபாரி (I. Saibari) பதில் கோல் அடித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மொரோக்கோ அணி முழு ஆதிக்கத்தைச் செலுத்தியது.

ஆட்டத்தின் 78ஆவது நிமிடத்தில் சி. ரியாத்தின் (C. Riad) உதவியுடன் எஸ். ரஹிமியும் (S. Rahimi), 89ஆவது நிமிடத்தில் எஸ். ரஹிமியின் உதவியுடன் ஜி. யாசினும் (G. Yassine) மொரோக்கோ அணி சார்பாக அடுத்தடுத்து கோல்களை அடித்தனர்.

ஆட்டநேர முடிவில் மொரோக்கோ அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் ஹெய்ட்டியை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Related recommendation
Hiru TV News | Programmes