General25 June 2026

ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவருக்கும் எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியல் !

கையூட்டு ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித நிர்மல ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் வசந்த குமார அபேசிங்க மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கும் வானூர்தி நிலையம் மற்றும் வானூர்தி சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் வருஷஹென்னதிகே அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோர் எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவினை சேர்ந்த ஒருவருக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து 12 கோடி ரூபாய் இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதற்கு போதிய காரணங்கள் முன்வைக்கப்படாததால், அவர்களின் பிணை கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், சந்தேகநபர்களை வரும் ஜூலை மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes