General27 June 2026

எகிப்து மற்றும் ஈரான் அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை

கால்பந்து தொடரின் குழு G பிரிவு ஆட்டத்தில், எகிப்து மற்றும் ஈரான் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இந்த போட்டி எகிப்து அணிக்கு கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக நொக்-அவுட் (Round of 32) சுற்றுக்குத் தகுதி பெற உதவியது.

போட்டியின் 5 ஆவது நிமிடத்தில் எகிப்து வீரர் மஹ்மூத் சேபர் (Mahmoud Saber) கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

அதற்குப் பதிலடியாக 14ஆவது நிமிடத்தில் ஈரானின் ராமின் ரெசையன் (Ramin Rezaeian) கோல் அடித்து சமநிலையை ஏற்படுத்தினார்.

இந்த முடிவின் மூலம், எகிப்து அணி குழு G-இல் இரண்டாம் இடத்தைப் பிடித்து நொக்-அவுட் சுற்றில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளத் தகுதி பெற்றுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes