General27 June 2026

பேலியகொடை மீன் சந்தையில் குறைந்தது மீன்களின் விலை

பேலியகொடை மீன் சந்தையில் மீன்களின் விலை தற்போது கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகள், தற்போது குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சாளை மீனின் மொத்த விற்பனை விலை தற்போது 400 ரூபாவாகக் குறைந்துள்ளது.

ஒரு கிலோ பலயா மற்றும் லின்னா மீன் வகைகள் தற்போது 900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக பேலியகொடை மத்திய மீன் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த கூரே குறிப்பிட்டார்.

மீன் வரத்து அதிகரித்துள்ளமையே இந்த விலை குறைப்பிற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுவதாக அவர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes