நாட்டின் பல பகுதிகளில் இன்று (ஜூன் 28) 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது குறித்து அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
அதேபோல், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வட-மத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Latest News
பொசன் வாரத்தை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கு பூட்டு - விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Local
28 June 2026
தங்கம், வெள்ளி விலை அதிகரிப்பு : புதிய விலை நிலவரம்!
Local
28 June 2026
எண்ணெய் விலையில் சடுதியான வீழ்ச்சி!
Local
28 June 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
28 June 2026
லெபனான் - இஸ்ரேல் ஒப்பந்தத்தை நிராகரித்த ஹிஸ்புல்லா!
Local
28 June 2026
வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிக்க குவைட் இராணுவம் தீவிரம்!
Local
28 June 2026
“நீர்நிலைகளில் கவனமாக இருக்கவும், அதிக ஒலியெழுப்பும் வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை”
Local
28 June 2026
ஈரானின் இராணுவக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் - ட்ரம்ப் எச்சரிக்கை!
Local
28 June 2026
கானாவுடனான போட்டியில் குரோஷியாவுக்கு வெற்றி: வெளியேறியது ஸ்கொட்லாந்து
Local
28 June 2026
பனாமாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி!
Local
28 June 2026