International29 June 2026

கட்டாரில் பேச்சுவார்த்தையென ட்ரம்ப் அறிவிப்பு : மறுக்கும் ஈரான்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது Truth Social சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரான்–இஸ்ரேல் மோதல் தொடர்பாக யுத்த நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் தரப்பு சந்திப்பொன்றை கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கட்டார் தலைநகர் டோஹாவில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சந்திப்புக்கு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்தக் கூற்றுக்கு முரணாக, ஈரானின் வெளியுறவுத் துணை அமைச்சர் காசெம் கரீபாபாதி (Kazem Gharibabadi), இந்த வாரம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நேரடி தொழில்நுட்ப மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான எந்தத் திட்டமும் தற்போது இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதனால், ட்ரம்பின் கருத்துக்கும் ஈரான் தரப்பின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பான மேலதிக அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes