மனித கடத்தல் மற்றும் கொலைகள் தொடர்பான வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் ஜுலை மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட மனித படுகொலைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலேயே அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மட்டக்களப்பில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவர் கொலை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் சுட்டுக் கொலை, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தல் உட்பட மனித கொலைகள் தொடர்பிலேயே பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதன்படி வழக்குடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரும் இன்று மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
"த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி" - மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
Local
19 September 2026
கிரிக்கெட் தெரிவுக்குழு முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க ரூ. 75 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு!
Local
19 September 2026
இங்கிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானம்
Local
19 September 2026
வாகனப் பதிவு மற்றும் போக்குவரத்து அசௌகரியங்கள் குறித்து முறைப்பாடு செய்ய புதிய 'வட்ஸ்அப்' இலக்கம் அறிமுகம்!
Local
19 September 2026
குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்து 'பாசிவ் கூலிங்' முறைகளை ஊக்குவிக்க இலங்கை அழைப்பு!
Local
19 September 2026
தம்புள்ளை அதிபரின் உயிரைப் பறித்த விபத்து: பேருந்து சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை அம்பலம்!
Local
19 September 2026
அனோஜனுக்காக முன் நிற்க அரசாங்கம் தயங்காது: நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா!
Local
19 September 2026
மகா ஓயாவில் நீராடச் சென்ற நால்வரில் இருவரின் உடலங்கள் மீட்பு
Local
19 September 2026
BRICS விவகாரத்தில் இலங்கையின் நகர்வு மந்தமா? பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன?
Local
19 September 2026
இஸ்லாமியப் புரட்சியும் அமெரிக்கப் பகையும் -'சூரியனின் விழுதுகளில் சிறப்பு அலசல்!
Local
19 September 2026