யுக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து ரஷ்யா நேற்று (29) மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு யுக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது பொதுமக்களை இலக்காகக் கொண்ட "பயங்கரமான தாக்குதல்" என அவர் விபரித்துள்ளார்.
ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களில் யுக்ரைனின் பல்வேறு உள்கட்டமைப்புகள், குடியிருப்புகள் மற்றும் பொதுச் சொத்துகள் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை, தெற்கு நகரமான ஜபோரிஜியாவில் ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், வடக்கு சுமி பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 69 வயதுடைய பெண் ஒருவரும், 77 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா மேற்கொண்ட இந்த திடீர் தாக்குதல்களால் யுக்ரைனின் குறைந்தது 6 பிராந்தியங்களில் உயிரிழப்புகளும் பாரிய சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Latest News
அரசாங்கத்தின் ஏமாற்று வேலைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம் - தனியார் பேருந்து சங்கம்!
Local
30 June 2026
'மிஸ்டர் கொத்து' உரிமையாளர் விராஜ் விக்ரமநாயக்க மஹரகம காவல்துறையினரால் கைது
Local
30 June 2026
குடிநீர் விநியோக நிறுவனம் என்ற போர்வையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை
Local
30 June 2026
மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை : புதிய விலை விபரங்கள் இதோ!
Local
30 June 2026
நாடு முழுவதும் பலத்த காற்று எச்சரிக்கை: 15 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Local
30 June 2026
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றமில்லை
Local
30 June 2026
கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய்
Local
30 June 2026
அரச அதிகாரிகளுக்கு விசேட அறிவிப்பு : சொத்து, பொறுப்பு அறிக்கை சமர்ப்பிக்க புதிய கால அவகாசம்!
Local
30 June 2026
"இவர்களுக்கு அடிப்படை கூட புரியவில்லை.. இந்த அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை!"
Local
30 June 2026
இந்திய அணி தேர்வில் சர்ச்சை! சூர்யவன்ஷி புறக்கணிப்பு குறித்து கொந்தளித்த முகமது கைஃப்
Local
30 June 2026