தனது நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியரைத் அச்சுறுத்தி, தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் உணவகத்தின் உரிமையாளர் விராஜ் விக்கிரமநாயக்க, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (30) அனுமதித்தது.
மத்தேகொட பிரதேசத்தில் உள்ள தனது உணவகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை தொடர்பில், காவல்துறையால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்டதன் மூலம் சமூகத்தில் பாரிய பரபரப்பு ஏற்பட்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊழியர் முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்திருந்ததாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர் இன்று (30) தனது சட்டத்தரணிகள் ஊடாக காவல்துறை நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
தலைமன்னார் தொடருந்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை!
Local
01 July 2026
யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதிக்கு எதிரான அவதூறு! - சட்ட நடவடிக்கை ஆரம்பம்
Local
01 July 2026
பொருளாதார வளர்ச்சியை 8% வரை உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு - ஜனாதிபதி அறிவிப்பு
Local
01 July 2026
முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக சுலக்ஷன ஜயவர்தன நியமனம்!
Local
01 July 2026
சிறுபோக நெல் கொள்வனவு திட்டத்திற்காக 6 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
Local
01 July 2026
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் சிங்கக் குட்டிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு
Local
01 July 2026
எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்கான விசேட அமைச்சரவை உபகுழு முதன்முறையாகக் கூடியது
Local
01 July 2026
குட்டி நீர்யானைக்கு பெயரிட மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!
Local
01 July 2026
ஜனாதிபதி அநுரவிடம் மாயக்கோல் கையளிக்கப்படவில்லை : வங்குரோத்தடைந்த திறைசேரியே ஒப்படைக்கப்பட்டது – அமைச்சர் வசந்த சமரசிங்க
Local
01 July 2026
மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் : குருநாகல் - கலேவெல முதலாம் கட்டப் பணிகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
Local
01 July 2026