எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ (El-Nino) காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து ஆராய்வதற்காக, சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தியின் தலைமையிலான விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் முதன்முறையாகக் கூடியது.
உணவுப் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி பாதுகாப்பைப் பேணுவதற்கான திட்டங்களைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் அமைச்சர்களான கே. டி. லால்காந்த, சமந்த வித்யாரத்ன, அநுர கருணாதிலக, வசந்த சமரசிங்க மற்றும் சுசில் ரணசிங்க ஆகியோர் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
தற்போதைய தரவுகளின்படி, எல்-நினோவினால் கடுமையான தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 63% ஆகக் காணப்படுவதால், குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் மிவலுசக்தி ஆகிய துறைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென இங்கு வலியுறுத்தப்பட்டது.
இதற்கமைய, ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், எல்-நினோ நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மாத்திரமே உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
Latest News
வளர்ப்புப் பிராணிகளைப் பதிவு செய்வது இனி கட்டாயம் - புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி!
Local
01 July 2026
புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
Local
01 July 2026
தலைமன்னார் தொடருந்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை!
Local
01 July 2026
யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதிக்கு எதிரான அவதூறு! - சட்ட நடவடிக்கை ஆரம்பம்
Local
01 July 2026
பொருளாதார வளர்ச்சியை 8% வரை உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு - ஜனாதிபதி அறிவிப்பு
Local
01 July 2026
முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக சுலக்ஷன ஜயவர்தன நியமனம்!
Local
01 July 2026
சிறுபோக நெல் கொள்வனவு திட்டத்திற்காக 6 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
Local
01 July 2026
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் சிங்கக் குட்டிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு
Local
01 July 2026
எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்கான விசேட அமைச்சரவை உபகுழு முதன்முறையாகக் கூடியது
Local
01 July 2026
குட்டி நீர்யானைக்கு பெயரிட மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!
Local
01 July 2026