தற்போது 5% மட்டத்திலுள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7% - 8% மட்டத்திற்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினருடன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைப் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்காக அடுத்த ஆண்டில் மூலதனச் செலவாக 2 ட்ரில்லியன் ரூபாவை ஒதுக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.
இதன் மூலம் ஏற்படும் டொலரின் தேவையை ஈடுசெய்ய ஏற்றுமதித் துறையின் அதிகபட்ச பங்களிப்பை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது இலங்கையின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி வருமானத் துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் வருடத்திற்கு 5 பில்லியன் டொலர்களையும், மின் மற்றும் இலத்திரனியல் துறை மூலம் 2 பில்லியன் டொலர்களையும் ஈட்டும் சாத்தியக்கூறுகள் குறித்தும் போது ஆராயப்பட்டது.
அத்துடன், இந்த துறைகளை உலகளாவிய வர்த்தக நாமமாக மாற்றுவதற்கும், எதிர்கொள்ளும் சவால்களுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்கும் விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, மெய்நிகர் விசேட பொருளாதார வலயம் மற்றும் தரவு மையத்தை ஸ்தாபிப்பதற்கான திட்டங்கள், சுங்கத் தடைகளை நீக்குவதற்கான "Green Channel" முறைமை மற்றும் வங்கி முறைமையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
Latest News
வளர்ப்புப் பிராணிகளைப் பதிவு செய்வது இனி கட்டாயம் - புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி!
Local
01 July 2026
புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
Local
01 July 2026
தலைமன்னார் தொடருந்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை!
Local
01 July 2026
யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதிக்கு எதிரான அவதூறு! - சட்ட நடவடிக்கை ஆரம்பம்
Local
01 July 2026
பொருளாதார வளர்ச்சியை 8% வரை உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு - ஜனாதிபதி அறிவிப்பு
Local
01 July 2026
முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக சுலக்ஷன ஜயவர்தன நியமனம்!
Local
01 July 2026
சிறுபோக நெல் கொள்வனவு திட்டத்திற்காக 6 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
Local
01 July 2026
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் சிங்கக் குட்டிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு
Local
01 July 2026
எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்கான விசேட அமைச்சரவை உபகுழு முதன்முறையாகக் கூடியது
Local
01 July 2026
குட்டி நீர்யானைக்கு பெயரிட மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!
Local
01 July 2026