General02 July 2026

சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தரவிடம் 4 மணித்தியாலங்கள் விசாரணை!

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தரவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட இந்த நீண்ட விசாரணை மற்றும் வாக்குமூலப் பதிவின் பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுத் தலைவரான 'கெஹெல்பத்தர பத்மே' என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துகொள்வதற்காகவே அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes