அரச புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணினிக்கான கடவுச் சொற்களை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நீதிமன்ற உத்தரவுக்கு தாம் மதிப்பளிப்பதாகவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
இந்த நிலையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பித்துள்ள உத்தரவை ஆட்சேபித்து, சுரேஷ் சலேயின் சட்டக் குழுவினர் மேன்முறையீடு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, சுரேஷ் சலே, தமது கடவுச் சொற்களை வழங்குவதற்கு ஏன் கட்டாயப்படுத்தக்கூடாது என்பதற்கான 04 காரணங்களை, உதய கம்மன்பில இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, இலங்கையின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், ஒரு சந்தேகநபர் தனக்கு எதிரான விசாரணைக்கு உதவுமாறு கட்டாயப்படுத்தப்பட முடியாது என்பதே முதல் காரணம் என கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
“சந்தேகநபர் தனக்கு எதிரான விசாரணைக்கு உதவ வேண்டிய கடமை இல்லை. அவர் விரும்பினால் மௌனமாக இருக்க அவருக்கு உரிமை உண்டு,” என்று அவர் கூறினார்.
இரண்டாவது காரணமாக, புலனாய்வாளர்களோ அல்லது பொது அதிகாரிகளோ ஒரு சந்தேகநபரை கடவுச்சொற்களை வெளியிடுமாறு வற்புறுத்தவோ, அச்சுறுத்தவோ அல்லது தூண்டவோ கூடாது என்றும், அத்தகைய நடத்தை, முறையற்ற செல்வாக்கிற்கு வழிவகுக்கும் என்றும் உதய கம்மன்பில் குறிப்பிட்டுள்ளார்.
சலேயின் மின்னணு சாதனங்களில், அவர் உளவுத்துறையில் பணியாற்றிய 38 ஆண்டுகளில் திரட்டிய உளவுத்துறை ஆதாரங்கள் தொடர்பான மிகவும் இரகசியமான தகவல்கள் இருக்கலாம் என்பதே 03 ஆவது காரணமாக அவர் கூறியுள்ளார்.
நான்காவது காரணமாக, 2002 ஆம் ஆண்டு மில்லேனியம் நகர சம்பவத்தை உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
"உளவுத் தகவல்கள் அம்பலப்படுத்தப்படும்போது என்ன நடக்கும் என்பதை மில்லேனியம் நகர சம்பவத்தின் கசப்பான அனுபவம் எடுத்துக்காட்டியுள்ளதாகவும், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் தகவல் அளிப்பவர்கள் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்பட்டதால், உயிரிழப்புகளும் உளவு வலையமைப்புகளின் வீழ்ச்சியும் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சலே தனது கடவுச்சொற்களை வெளியிட மறுப்பதற்கு இதுவே காரணம் எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான எந்தவொரு சவாலும் சட்டரீதியான செயல்முறையின் மூலமே தொடரப்பட வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Latest News
பதவியை இழப்பாரா அர்ச்சுனா - ஆகஸ்டில் விசாரணைக்கு வருகிறது வழக்கு
Local
02 July 2026
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா - இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Local
02 July 2026
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் - கைப்பற்றப்பட்ட உபகரணங்களை விடுவிப்பது குறித்து விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
Local
02 July 2026
கொழும்பு மாவட்ட பிரதேச செயலகங்களில் வங்கி அட்டைகள் மூலம் கொடுப்பனவு வசதி
Local
02 July 2026
விசாரணைக்கு உதவுமாறு சந்தேகநபரை கட்டாயப்படுத்த முடியாது - சுரேஷ் சலே விவகாரத்தில் உதய கம்மன்பில தெரிவிப்பு
Local
02 July 2026
2028 முதல் பிளேஸ்டேஷனில் டிஸ்க் கேம்களுக்கு முடிவா? : தொழில்நுட்பத் தரப்பில் பரவும் புதிய தகவல்!
Local
02 July 2026
தாய்லாந்தில் 11 வயது சிறுவன் செலுத்திய வாகனம் மோதி 8 பௌத்த துறவிகள் உயிரிழப்பு
Local
02 July 2026
கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டு - காலி மாநகர சபையின் அதிகாரிகள் இருவருக்கு மீண்டும் விளக்கமறியல்
Local
02 July 2026
ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் 4 பேர் விபத்துக்களால் பலி : தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிகள் என்ன?
Local
02 July 2026
'வரி சக்தி 2026' தேசிய வரி வாரம் ஜூலை 6 இல் ஆரம்பம் - ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு
Local
02 July 2026