General02 July 2026

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் - கைப்பற்றப்பட்ட உபகரணங்களை விடுவிப்பது குறித்து விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விசாரணையில் கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை விடுவிப்பது தொடர்பான கோரிக்கை குறித்து நாளை (03) விளக்கமளிக்குமாறு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பு அதிகாரிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் துறையின் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் கைபேசிகளை விடுவிக்குமாறு கோரி, டபிள்யூ.டி.என்.எச். பெரேரா என்பவர் சார்பாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நாளை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது, இது குறித்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தங்களது பதிலைச் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes