General03 July 2026

ரகித, சரித் அபேசிங்க மற்றும் அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச , சரித் அபேசிங்க மற்றும் அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோரை எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதாள உலகக் குழுத் தலைவரான "ஹரக் கட்டா" என்பவரை புஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து மாற்றுவதற்காக, 120 மில்லியன் ரூபா கையூட்டல் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் இன்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes