General03 July 2026

4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் புதிய சாதனை படைத்த கொழும்பு மகளிர் கல்லூரி

தியகம மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் நடைபெற்று வரும் Hiru Relay Championship 2026 , 14 வயதிற்குட்பட்ட மகளிருக்கான 4X100 மீற்றர் அஞ்சலோட்டத்தில், கொழும்பு மகளிர் கல்லூரி புதிய சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த போட்டியை 52.33 வினாடிகளில் நிறைவு செய்து, குறித்த அணி புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.

இதற்கு முன்னர் கடுவெல கொத்தலாவல வித்தியாலயத்தினால் நிலைநாட்டப்பட்டிருந்த 53.21 வினாடிகள் என்ற சாதனை இவர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோ சில்வாவின் வழிகாட்டலின் கீழ், ஹிரு ஊடக நிறுவனத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.

இலங்கை பாடசாலைகள் தடகள சங்கத்தினால் 4ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டி , கல்வி அமைச்சின் அனுமதியுடன் அனைத்து வயதுப் பிரிவினரையும் உள்ளடக்கும் வகையில் நடத்தப்படுகிறது.

இதில் நாடளாவிய ரீதியில் 4500க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes