General03 July 2026

16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400x4 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி வெற்றி

தியகம மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் நடைபெற்று வரும் Hiru Relay Championship 2026 அஞ்சல் ஓட்டப் போட்டித் தொடரில், 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400x4 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி வெற்றி பெற்றது.

ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோ சில்வாவின் வழிகாட்டலின் கீழ், ஹிரு ஊடகக் குழுமத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றது.

இலங்கை பாடசாலைகள் தடகள சங்கத்தினால் 4ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அஞ்சலோட்டப் போட்டித் தொடர், கல்வி அமைச்சின் அங்கீகாரத்துடன் நடத்தப்படுகின்றது.

நாட்டின் அனைத்துப் பாகங்களையும் உள்ளடக்கியதாக, அனைத்து வயதுப் பிரிவுகளின் கீழ் 4,500க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes