General03 July 2026

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை ஆயிரத்து 280 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அதன் புதிய விலை நான்காயிரத்து,965 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை 5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 512 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை ஆயிரத்து 988 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
 
Related recommendation
Hiru TV News | Programmes