General06 July 2026

பொருளாதார, வர்த்தக சக்திகளால் மறைமுக ஆக்கிரமிப்பு : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு!

நாட்டினதும், பிராந்தியத்தினதும் ஒருமைப்பாடு பாதிக்கப்படும் போது, அதனை மௌனமாக பார்வையிட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கின்றார்.

கதிர்காமத்திற்கு வழிபாடுகளுக்குச் சென்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழ்நிலையில் மிக நுட்பமான முறையில் நாட்டில் ஏகாதிபத்தியம் கடைப்பிடிக்கப்படுவதாகவும் எதிர்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

முன்னர் நேரடியாக நாடு ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், தற்போது, பொருளாதார மற்றும் வர்த்தக சக்திகளைப் பயன்படுத்தி மறைமுக ஆக்கிரமிப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

உலக நாடுகள் மாத்திரமின்றி, சர்வதேச நிறுவனங்களும் நாட்டின் தேசிய செயற்றிட்டங்கள் மீது ஆளுகை செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, எந்தவித பாகுபாடும் இன்றி, இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes