நீர்கொழும்பு சிறைச்சாலை சர்வதேச சட்டங்களின்படி கடுமையான குற்றம் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல் . பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் இலங்கைச் சட்டம் மற்றும் சர்வதேச சட்டங்களின் கீழ் மிகவும் கடுமையான ஒரு குற்றமாகும் .
இந்தச் சம்பவமானது இலங்கை அரசியலமைப்பின் 11 வது உறுப்புரையை அப்பட்டமாக மீறியுள்ளதுடன், இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டுள்ள நான்கு சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் முற்றிலும் முரணானதாகும்.
ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இந்தச் மோதல் நிலைமை, அன்று மாலைக்குள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், நேற்று காலை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
கொழும்பு சிறைச்சாலையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் நீர்கொழும்புக்குச் சென்றிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவை பிறப்பித்தது யார் மற்றும் அந்தத் தீர்மானத்தை எடுத்தது யார் ? உயிரிழந்த சிலரின் உடலங்களில் துப்பாக்கிக் குண்டுகள் காணப்படுவதன் மூலம் அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கு நீதியமைச்சர் பொறுப்பேற்பதாகக் கூறியுள்ள நிலையில், அவர் வெறும் வார்த்தை அளவில் பொறுப்பேற்காமல் தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் . சர்வதேச பாரம்பரியத்தின்படி பொறுப்பேற்பது என்பது பதவி விலகலையே குறிக்கும்.
மேலும், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சிறைச்சாலைகள் தொடர்பான பொறுப்பில் இருந்து மட்டும் விலகிவிட்டு, நீதியமைச்சின் ஏனைய பதவிகளில் நீடிப்பது தர்க்கரீதியானது அல்ல என்றும், ஒட்டுமொத்த அமைச்சுப் பதவியிலிருந்தும் அவர் விலக வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
Latest News
ஹோர்மூஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்: வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்
Local
07 July 2026
"அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும்"
Local
07 July 2026
மெக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இரட்டை வெடிப்பு சம்பவம் - 18 பேர் காயம்
Local
07 July 2026
இலங்கைக்குக் கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்கள் பறிமுதல் - இருவர் கைது
Local
07 July 2026
சட்ஜிபிடியில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு : AI படம் உருவாக்கும் சேவையில் சிக்கல் - பயனர்கள் முறைப்பாடு!
Local
07 July 2026
'கெப்டன் கூல்' தோனிக்கு முதலமைச்சர் விஜய் கூறிய வாழ்த்து!
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் சர்வதேச சட்டங்களின்படி கடுமையான குற்றம்; நீதியமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தல்!
Local
07 July 2026
கொழும்பு கோட்டையில் தொடருந்து தடம் புரள்வு: சேவைகள் கடும் தாமதம்!
Local
07 July 2026
ஆசிய ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தின் முழுமையான அனுசரனையுடன் ஆசிய மெய்வல்லுநர் போட்டி யாழில்
Local
07 July 2026
“டெங்கு நோயினால் நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் மரணித்ததாக கூறப்படுவது பொய்”
Local
07 July 2026