General08 July 2026

நாட்டின் பல பகுதிகளில் மழை: ஏனைய பகுதிகளில் வரட்சியான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று(08) மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

இதேவேளை ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வரட்சியான வானிலை நிலவும்.

மேலும் மத்திய மலை நாட்டின் மேற்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, மத்திய, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes