பூமியின் ஈர்ப்பு விசைக்கு பழகிய மனித உடல், விண்வெளியின் ஈர்ப்பு அற்ற சூழலில் தன்னை மாற்றிக்கொள்வதாக சர்வதேச ஊடகம் ஒன்றின் செய்தி ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஐரோப்பிய விண்வெளி மையத்தின் விண்வெளி வீரர் லூகா பார்மிட்டானோவின் கூற்றுப்படி, சில வாரங்களிலேயே கால்கள் மெலிந்து, முகம் வீங்கியது போன்ற உடல் மாற்றங்களை விண்வெளி வீரர்களால் உணர முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்
ஈர்ப்பு விசை இல்லாததால் எலும்புகளில் கால்சியம் குறைகிறது, தசைகள் பலவீனமடைகின்றன. இதைக் கட்டுப்படுத்த விண்வெளி வீரர்கள் தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
லண்டனின் பிர்பெக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 377 பங்கேற்பாளர்களின் தரவுகளைக் கொண்டு, விண்வெளிப் பயணம் மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்களை ஆய்வு செய்துள்ளனர்.
நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity): மனித மூளை விண்வெளி சூழலுக்கு ஏற்ப தன்னை மறுசீரமைத்துக் கொள்கிறது.
குறிப்பாக இயக்கம், சமநிலை மற்றும் உடல் விழிப்புணர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளைப் பகுதிகளில் மாற்றங்கள் ஏற்படுவதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
மனித மூளை பிறக்கும்போதே ஈர்ப்பு விசையை உணரும் விதமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. மனிதன் நடப்பது, ஒரு பொருளை எடுப்பது போன்ற அன்றாடச் செயல்கள் அனைத்தும் மூளையின் ஈர்ப்பு விசை உணர்வால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
நீண்ட கால விண்வெளிப் பயணங்களின் போது, வீரர்கள் ஈர்ப்பு அற்ற நிலைக்கு முழுமையாகப் பழகிவிடுவார்கள்.
இதனால், செவ்வாய் போன்ற கிரகங்களில் தரையிறங்கும் போது, அவர்களின் மூளை மீண்டும் ஈர்ப்பு விசைக்கு மாறுவதில் சிரமங்களைச் சந்திக்கலாம்.
இந்தநிலைமைய, விண்வெளி வீரர்களின் முடிவெடுக்கும் திறன் மற்றும் செயல்பாட்டைப் பாதிக்கும் அபாயம் உள்ளது.
விண்வெளியில் செயற்கை ஈர்ப்பு விசையை உருவாக்குவது இதற்கு ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்பட்டாலும், அது அதிக செலவு மற்றும் எடையைக் கொண்டதால் கடினமாக உள்ளது.
இதற்கு மாற்றாக, மூளையின் குறிப்பிட்ட பகுதிகளை மின் தூண்டுதல் மூலம் இயங்க வைக்கும் புதிய நுட்பங்களை ஆய்வாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.
விண்வெளிப் பயணம் என்பது வெறும் உடல் ரீதியான சவால் மட்டுமல்ல, மூளையின் செயல்பாட்டையும் மாற்றியமைக்கக்கூடியது.
எனவே இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்வது, விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, மனித மூளையின் செயல்பாடு குறித்த கூடுதல் ரகசியங்களையும் அறிந்துகொள்ள உதவும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
Latest News
சிறுபோக நெல் கொள்முதல் ஜூலை 15 முதல் ஆரம்பம்: ரூ. 16 பில்லியன் ஒதுக்கீடு
Local
08 July 2026
விண்வெளியில் மனிதனில் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்!
Local
08 July 2026
ஈரான் மீது இன்றிரவு கடுமையான தாக்குதல்: போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Local
08 July 2026
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்: சந்திரிகாவிடம் விசாரணை நடத்துமாறு ரவிகரன் வலியுறுத்தல்
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைக்கலவரம்: கடந்தகால சம்பவங்களிலிருந்து வேறுபடுகிறது – ரவிகரன்
Local
08 July 2026
பேஸ்புக் இல் AI மூலம் மோசடி: இலங்கை பயனர்களுக்கு எச்சரிக்கை
Local
08 July 2026
வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கை - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்
Local
08 July 2026
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு OCI அட்டை கையளிப்பு
Local
08 July 2026
குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு திட்டத்தில் விசேட ஏற்பாடுகள்
Local
08 July 2026
கிராண்ட்பாஸ், ஒருகொடவத்தை சந்திக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து நெரிசல்!
Local
08 July 2026