நாட்டின் சில பகுதிகளில் இன்று (12) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சபரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மாகாணம், மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Latest News
"120 நாட்களில் மதிப்பிட முடியாது... ஒரு வருடம் பொறுத்திருங்கள்" : முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி குறித்து பிரகாஷ் ராஜ் கருத்து!
Local
20 September 2026
குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் கட்டுநாயக்க வந்தடைந்தனர்
Local
20 September 2026
"ஆண்களுக்கும் மாதவிடாய் வரவேண்டும் - 1000 முறை பிரார்த்தித்திருக்கிறேன்" : நடிகை ஸ்ருதி ஹாசன் பரபரப்பு பேச்சு!
Local
20 September 2026
கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு (சிவப்பு) எச்சரிக்கை
Local
20 September 2026
மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்: அதிக ஓட்டங்கள் குவித்து ஸ்மிருதி மந்தனா புதிய உலக சாதனை!
Local
20 September 2026
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கையுடன் இறுதிப்போட்டியில் மோதுகிறது இந்தியா
Local
20 September 2026
ICC இருபதுக்கு 20 தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து இந்தியாவை பின்னுக்குத் தள்ளியது இங்கிலாந்து!
Local
20 September 2026
மாத்திரைகள் தேவையில்லை? : மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் புதிய சாதனம்!
Local
20 September 2026
மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை!
Local
20 September 2026
காலி மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!
Local
20 September 2026