General13 July 2026

ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதலை ஆரம்பித்தது அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஈரான் மீது புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது.

கிழக்கு நேரப்படி மாலை 5 மணி (ET) முதல் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

வணிகக் கப்பல்களின் தடையற்ற போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் ஈரானின் திறனைச் சிதைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரானிய படைகளை இந்த செயல்களுக்குப் பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும் என்ற உயர்மட்ட உத்தரவின் பேரில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தத் தாக்குதல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானின் தெற்குப் பகுதிகளில் உள்ள பல இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, கெஷ்ம் தீவு (Qeshm Island), ஜாஸ்க் (Jask), சிரிக் (Sirik) மற்றும் பண்டார் அப்பாஸ் நகரின் மேற்குப் பகுதிகளில் இந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes