இன்றைய நவீன அலுவலக கலாசாரத்தில் வேலை செய்வது போல பாசாங்கு செய்தல் என்பது ஒரு புதிய பேசுபொருளாக மாறியுள்ளது.
‘Software Finder’ நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வு, குறிப்பாக ‘Gen Z’ ஊழியர்கள் மத்தியில் இந்த அழுத்தம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் நிறுவனங்களில் தொழில் புரியும் சுமார் 1000 பேரிடம் புதிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்களில் 80 வீதமானோர் Gen Z ஊழியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 80 வீதமான Gen Z ஊழியர்கள் வேலை முடிந்த பின்னரும் வேலை செய்வது போல நடிப்பதற்கு மிக முக்கியமான காரணம் "பயம்" என ஆய்வில் தெரியவந்துள்ளது.
"தான் விரைவாக வேலையை முடித்துவிட்டால், மேலாளர்கள் தன் மீது அதிக வேலையைச் சுமத்துவார்கள்" அல்லது "நான் சோம்பேறியாக இருக்கிறேன் என்று நினைப்பார்கள்" என்ற பயம் Gen Z தலைமுறையினரிடம் இருப்பதாக ஆய்வில் வெளியாகியுள்ளது.
மேலாளர்களின் பார்வையில் தாங்கள் வேலை பழுவுடன் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு ஊழியர்கள் கணினி சுட்டியை (Computer Mouse) தானாகவே நகர்வது போலச் செய்து, கணினி ‘Active’ நிலையில் இருப்பதை உறுதி செய்கின்றனர்.
வேலை முடிந்தாலும், மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகளுக்கு உடனடியாகப் பதிலளிக்காமல், சிறிது நேரம் கழித்து பதில் அனுப்புதல்.
அலுவலக வேலை தொடர்பான பல இணையதளப் பக்கங்களைத் திறந்து வைத்து, வேலையாக இருப்பதைப் போலக் காட்டுதல் ஆகிய முறைகளை பின்பற்றுவதாக ஆய்வில் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வானது, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் "நேரத்தை" கண்காணிப்பதை நிறுத்திவிட்டு, அவர்களின் "திறனை" மதிக்கத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
ஊழியர்கள் பயமின்றி, தங்கள் பணிக்கான மதிப்பைப் பெற்றுத் திருப்தியுடன் வேலை செய்யும் சூழலே ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதே இந்த ஆய்வின் நோக்கம் என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Latest News
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 200 பேரிடம் வாக்குமூலம்- ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விசேட விசாரணைக்குழு!
Local
14 July 2026
பதுளை மாநகர சபை உறுப்பினர் மஹிந்த குணசேகர பதவி விலகல்: புதிய உறுப்பினர் பதவியேற்பு
Local
14 July 2026
நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்? அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்!
Local
14 July 2026
தமிழுக்கு மீண்டும் பெருமை! ஞானபீடம் வென்ற கவிஞர் வைரமுத்து
Local
14 July 2026
இயக்குநர் அவதாரத்தைத் தொடர்ந்து நடிகராகும் ஜேசன் சஞ்சய் : தந்தை விஜய்யின் பாதையில் புதிய பயணம்!
Local
14 July 2026
வேலை செய்வது போல் பாசாங்கு செய்யும் Gen Z தலைமுறை: ஆய்வில் வெளியான தகவல்
Local
14 July 2026
ஆட்சி மாற்றத்திற்கு சிறுவர்கள் காரணமா? - தவெக மீது தொடரும் குற்றச்சாட்டுகள்
Local
14 July 2026
ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்
Local
14 July 2026
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு
Local
14 July 2026
தங்கத்தின் விலை மீண்டும் சரிவு : நகை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு நற்செய்தி!
Local
14 July 2026